திருமங்கலத்தில் 10 புதிய வழித்தட பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்

திருமங்கலத்தில் 2 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 புதிய வழித்தட பேருந்துகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் துவக்கி வைத்தார்.

 

தமிழக மக்களின் தேவையை அறிந்து மாநில அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை முறையாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் விதமாக திருமங்கலத்தில் இருந்து மதுரை, கம்பம் மார்க்கமாக ஈரோடு, மற்றும் கோயம்புத்தூர்,திருப்பூர், செங்கோட்டை முதலான பகுதிகளுக்கு செல்லக்கூடிய 10 புதிய வழித்தட பேருந்துகளை வருவாய்த்துறை அமைச்சர் திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து மதுரை திருமங்கலம் அரசு மருத்துவமனையில் புதிய ரத்த சுத்திகரிப்பு நிலையத்தையும் ஆர்.பி.உதயக்குமார் துவக்கி வைத்தார்.

Exit mobile version