கொரோனா தடுப்புப் பணியில் 17,854 அரசு ஊழியர்கள் பங்கேற்பு – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில், 17 ஆயிரத்து 854 அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இயங்கும் 24 மணி நேர கொரோனா வைரஸ் நோய் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாவட்டத்தில்  கொரோனோ  அவசரகால கட்டுப்பாட்டு அறையில் இதுவரை 2199 கோரிக்கை தொடர்பான அழைப்புகள் வந்துள்ள நிலையில், மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். மதுரை மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட 17 ஆயிரத்து 854 பேர் களப்பணியில் ஈடுபட்டு வருவதாகக் கூறினார். மதுரை மாவட்டம் முழுவதும் இதுவரை அத்யாவசியமின்றி வெளியே வந்த 10 ஆயிரத்து 820 பேர் மீது  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Exit mobile version