’உயர்நீதிமன்ற தீர்ப்பு அதிமுக தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது’ – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேச்சு!

rb udayakumar press meet

அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, மீண்டும் அதிமுக ஆட்சி அமைவதற்கு தொண்டர்கள் உழைக்க, உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் விருது வழங்கும் விழா ஒன்றில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த அவர், எட்டு வழிச்சாலை திட்டத்தில் திமுக தனது நிலைபாட்டை மாற்றிக்கொண்டுள்ளதாக விமர்சித்தார்.

மேலும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ளவர்களை மாநில அரசே விடுவிக்கலாம் என கூறியதாகவும், தற்போது மெளனம் காப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, திமுகவை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடி கே.பழனிசாமியை முதல்வராக்குவதற்கும் அதிமுக தொண்டர்கள் உத்வேகத்தோடு தயாராகிவிட்டதாக தெரிவித்தார்.

Exit mobile version