எதிர்கட்சியுடன் இணைந்து செயலாற்றுங்கள் – திமுகவுக்கு ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தல்

அரசியல் காழ்ப்புணர்சியை தவிர்த்து கொரோனா 2 வது அலையிலிருந்து மக்களைக் காக்க புதிதாக அமையவுள்ள அரசு, எதிர்க்கட்சியுடன் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

 சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலில் 5 முனை போட்டியில் அதிமுக மற்றும் திமுகவை தவிர, மற்ற மூன்று கட்சிகளை மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளதாக கூறினார். தற்போது தீவிரமடைந்து வரும் கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காக்க புதிதாக அமையவுள்ள அரசு, எதிர்க்கட்சியுடன் ஒருங்கிணைந்து சேவையாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

 

Exit mobile version