சுற்றுலாப் பயணிகளை தத்துருவமாக படம் வரையும் 70 வயது முதியவர்

கொடைக்கானலில் “தன் கையே தனக்கு உதவி” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு ஓவியம் வரைந்து தனது காலத்தை கழிக்கும் பட்டதாரி முதியவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் காந்தி. 70 வயது ஓவிய கலைஞரான இவர், ஓவிய கலையில் பட்டம் பெற்று, அரசு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது தேனியிலிருந்து தினந்தோறும் கொடைக்கானலுக்கு பேருந்தில் சென்று அங்குள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பார்க் போன்ற சுற்றுலா தளங்களுக்கு வரும், சுற்றுலாப் பயணிகளை தத்துருவமாக படம் வரைந்து கொடுத்து அதற்கு கணிசமாக பணம் பெற்றுக்கொள்கிறார்.

மேலும் இவர் தனது சொந்த செலவிற்காக குடும்பத்தினரிடம் பணம் கேட்பது கிடையாது. ஓவியம் வரைவதன் மூலம் கிடைக்கும், வருமானத்தில், தன்னை பார்த்து கொள்வதாக தெரிவிக்கும் இவர், “தனக்கு கண்பார்வை மங்கும் வரை தனது ஓவிய கலை தொடரும் என புன்னகையுடன் தெரிவிக்கிறார்.

Exit mobile version