விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று, தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி புரசைவாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தங்க மோதிரங்களை பரிசாக வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன், பிரதமர் மோடியின் பிறந்த நாளை சேவை நாளாக கொண்டாடி வருவதாக பெருமையோடு குறிப்பிட்டார். மேலும், எச்.ராஜா விவகாரத்தில் இருதரப்பு கருத்தையும் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன், விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக் கொண்டார்.