தெலங்கானா மாநில ஆளுநராக தமிழிசை பதவியேற்றார்

தமிழக பாரதிய ஜனதா தலைவராக இருந்த தமிழிசை தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

தெலங்கானா தலைநகர் ஐதரபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திர சிங் சவுகான், தமிழிசை சவுந்தரராஜனுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அமைச்சர்கள் பங்கேற்றனர்.

தமிழகத்தின் சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், பிரேமலதா விஜயகாந்த், ஏ.சி.சண்முகம், சரத் குமார், ராதிகா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். பதவியேற்றக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், தனது தந்தை குமரி அனந்தன் காலில் விழுந்து வணங்கி ஆசிப் பெற்றார்.

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு, பெண் ஒருவர் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிப்பது இதுவே முதல் முறையாகும்.

Exit mobile version