கிராம மக்களுக்கான அஞ்சலக வங்கி சேவை

மத்திய அரசின் கீழ் இயங்கும் தபால் துறையை, வங்கி சேவையுடன் இணைக்கும் திட்டம் இன்று முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. டெல்லி தல்காதோரா மைதானத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில், இந்த திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வங்கி சேவையை மக்கள் மத்தியில் விரிவுபடுத்தும் விதமாகவும், கிராம மக்களும் பயன பெரும் விதமாகவும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் நாட்டின் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், அஞ்சலக வங்கி சேவை திட்டத்தில் இணைக்கப்படவுள்ளன. தற்போது 650 தபால் நிலையங்களிலும், 3 ஆயிரத்து 250 மையங்களிலும் அஞ்சலக சேவை வழங்கப்பட உள்ளது. வங்கிகளில் வழங்கப்படும், சேமிப்பு, நடப்பு கணக்கு, பணப் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அஞ்சலக வங்கி சேவை மூலம் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version