காசியாபாத்தில் கண்ணீர் புகை குண்டு, தண்ணீரைப் பீய்ச்சி அடித்து பாரதிய விவசாயிகள் அமைப்பினர் கலைக்கப்பட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், அந்தச் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் மத்திய வேளாண் அமைச்சர் ராதா மோகன் சிங்குடன், ராஜ்நாத் ஆலோசனை செய்தார். அப்போது 9 கோரிக்கைகளில் 7-ஐ ஏற்க மத்திய உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியது. ஆனால் மத்திய அரசின் உத்தரவாதத்தை ஏற்க முடியாது என்றும் போராட்டம் தொடரும் எனவும் விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, டெல்லிக்குள் நுழைய முயன்ற விவசாயிகள் மீது போலீசார் நடத்திய தடியடிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்குள் அமைதியாக நுழைய முயன்ற விவசாயிகள் மீது பா.ஜ.க. அரசு காட்டுமிராண்டித்தனமாக தடியடி நடத்தியுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கைகள் நாட்டின் தலைநகருக்குள் நுழைய முடியாதபடி முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.