இந்தக் கல்லூரியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வகுப்பறைக்குள் கற்கள் மற்றும் கம்புகள் கிடந்துள்ளது.
இதனை கண்ட மாணவர்கள் கல்லூரி பொறுப்பு முதல்வர் விமலாவிடம் தகவல் தெரிவித்தனர்.
அதனை கண்டுகொள்ளாமல் விமலா அலட்சியப்படுத்தியதாக புகார் கூறப்படுகிறது.
அத்துடன் கல்லூரியில் குடிநீர் மற்றும் பேருந்து வசதிகளை அவர் செய்து தரவில்லை என்றும் மாணவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு செல்லாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறுப்பு முதல்வரை இடமாற்றம் செய்வதுடன், கல்லூரியில் காலியாக உள்ள கவுரவ விரிவுரையாளர் இடத்திற்கு தகுதியானவர்களை நியமிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.