கர்நாடகாவில் அரசு அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு படையினர் சோதனை! கோடிக்கணக்கில் ஆவணங்கள் பறிமுதல்!

கர்நாடகாவில் அரசு அதிகாரிகளின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் படையினர் நடத்திய சோதனையில் கோடிக்கணக்கில் பணமும், பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் அரசு அதிகாரிகள் சொத்துகள் குவித்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தின் பொறியாளர் என்.ஜி.கெளடய்யா, கர்நாட தொழில்பேட்டை மேம்பாட்டு வாரிய வளர்ச்சித் துறை அதிகாரி டி.ஆர்.சுவாமி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்தது.

பெங்களூரு, தும்கூரு ஆகிய பகுதிகளில் சோதனைகளில் இவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதில், டி.ஆர்.சுவாமியிடம் இருந்து ரூபாய் 4 புள்ளி 52 கோடி பணம், 3 கார்கள், 1 புள்ளி 6 கிலோ தங்கம், 75 கிலோ வெள்ளி, 8 வீடுகள், 11 மனைகள் மற்றும் 14 ஏக்கர் விவசாய நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கெளடய்யாவிடம் இருந்து ரூபாய் 77 லட்சம் பணம், வங்கி கணக்குகளில் சுமார் ரூ.30 லட்சம், 18 புள்ளி 2 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளி, 3 கார்கள், 8 வீட்டு மனைகள், 2 வீடுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது

இதை தொடர்ந்து என்.ஜி.கெளடய்யா, டி.ஆர்.சுவாமி ஆகியோர் மீது ஊழல் ஒழிப்புச் சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version