கஞ்சா வழக்கில் கைதான பா.ம.க. நிர்வாகி – பாமகவை புரட்டி எடுத்த விஜய் ரசிகர்கள் !

விஜய் ரசிகர்களின் இணைய தாக்குதலுக்கு ஆளாகி உள்ளார் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் திரைப்படம் சர்கார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில்
விஜய் புகைப்பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது.

இதனால் சர்கார் திரைப்படமும், விஜயும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், விஜய் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கினை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதனால் அப்போதே விஜய் ரசிகர்களின் கோபத்துக்கு அன்புமணி ராமதாஸ் இலக்கானார். அண்மையில் பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் கஞ்சா விற்று போலீஸில் சிக்கியுள்ளார்.

இதனால் அந்த நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இதனை அறிந்த விஜய் ரசிகர்கள், அன்புமணி ராமதாஸை, சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

Exit mobile version