ஒரே நாளில் 7 பதக்கங்களை வென்று இந்தியா அசத்தல்

18 வது ஆசிய விளையாட்டுப்போட்டி இந்தோனேஷியாவில் நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒரே நாளில் இந்தியா 7 பதக்கங்களை தன் வசப்படுத்தியது. ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்திய அணியில் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் இணை, கஜகஸ்தான் அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது. ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் பிரிவில், சென்னையைச் சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். பெண்கள் கபடி போட்டியில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. துடுப்பு படகு போட்டியில் 4 பேர் கொண்ட ஆண்கள் பிரிவில், இந்தியா தங்கப் பதக்கம் வென்று அசத்தியது. துடுப்பு படகு போட்டியின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் துஷ்யந்த் வெண்கலம் பதக்கம் வென்றார். அதேபோல், துடுப்பு படகு போட்டியின் இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ரோகித்குமார், பகவான் தாஸ் வெண்கலப் பதக்கம் வென்றனர். துப்பாக்கிச்சுடுதல் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 6 தங்கம், 5 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 25 பதக்கங்களுடன், பதக்க பட்டியலில் இந்தியா 8வது இடத்தில் உள்ளது.

Exit mobile version