தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால், தமிழகத்திற்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. இதனால், நீர்வரத்து குறைந்து, தற்போது வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே ஒகேனக்கல்லுக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால், 15 நாட்களுக்கு பிறகு, ஒகேனக்கல் ஆற்றில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பரிசல் இயக்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து, சின்னாறு வழியாக மணல் திட்டு வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பரிசல் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு
- Tags: ஒகேனக்கல்பரிசல் இயக்க அனுமதி
Related Content
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
By
Web Team
September 26, 2020
காவிரியில் நீர்வரத்து 5 மடங்கு அதிகரிப்பு - தருமபுரியில் வெள்ள அபாய எச்சரிக்கை
By
Web Team
September 22, 2020
ஒகேனக்கலுக்கு நீர் வரத்து 35,000 கன அடியாக அதிகரிப்பு
By
Web Team
September 25, 2019
ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
By
Web Team
August 26, 2019
காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க தடை
By
Web Team
August 9, 2019