எய்ம்ஸ் மருத்துவமனை: சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை அரசு மருத்துவமனையில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறையுடன் தமிழக அரசு பேசி வருவதாகவும், தேவையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். உரிய முறையில் டெண்டர்கள் விடப்பட்டு பணிகள் தொடங்கப்படும் எனவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version