ரபேல் போர்விமான ஒப்பந்தத்தால் நாட்டிற்கு 41 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜிவாலா குற்றம்சாட்டி உள்ளார். சண்டிகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு அலட்சியம் காட்டுவதாக குற்றம்சாட்டினார்.
ரபேல் ஒப்பந்தத்தில் தொழில்நுட்ப வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறுவது பொய் என்றும், 2007ம் ஆண்டு காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட அதே வசதிகள் மட்டுமே தற்போதைய ஒப்பந்தத்திலும் உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவிலிருந்து அதிக அளவு அச்சுறுத்தல்கள் வரும்போது தேசிய பாதுகாப்பு விஷயத்தில் மோடி அரசு அலட்சியம் காட்டுவது ஏன்? என்றும் ரன்தீப்சிங் கேள்வி எழுப்பினார்.