பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாக கொண்டாட முடியுமா என பாஜகவுக்கு காங்கிரஸ் கட்சி சவால் விடுத்துள்ளது.
கடந்த 2016 ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி அன்று , பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்ற இந்திய ராணுவம், அங்குள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது.அதனை நினைவு கூறும் வகையில் வரும் 29-ம் தேதியை சர்ஜிகல் ஸ்டிரைக் தினமாக கொண்டாட என மத்திய அரசு முடிவெடுத்தது.
இதன் ஒரு பகுதியாக , நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு சுற்றறிக்கை அனுப்பியிருந்தது.
இதற்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், பண மதிப்பிழப்பு நாளை சர்ஜிகல் ஸ்டிரைக் நாளாகக் கொண்டாட பல்கலைக்கழக மானிய குழுவுக்கு தைரியம் உண்டா? என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. அதனை குறிப்பிட்டு தான் இந்த கேள்வியை அவர் எழுப்பியுள்ளார்.