ஆண்டு தோறும் மாரடைப்பால் ஒரு கோடி பேர் மரணம் – இது இந்திய சோகம்

 

இந்தியாவில் ஆண்டு தோறும் மாரடைப்பால் ஒரு கோடி பேர் மரணமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாரடைப்பின் காரணமாக மரணமடைபவர்கள் இந்தியாவில் தான் அதிகம் என்கிறது மாரடைப்பு தொடர்பான சர்வதேச ஆய்வு ஒன்று. இந்தியாவில் மாரடைப்பால் ஆண்டுதோறும் 80 லட்சம் முதல் 1 கோடி பேர் வரை மரணமடைவதாக அதிர்ச்சி அளிக்கிறது அந்த ஆய்வு.

இதய நோய் கண்டறியப்பட்டு ஓராண்டுக்குப் பிறகு 23 சதவீதம் பேர் மரணமடைகிறார்கள். ஓராண்டுக்குள் 46 சதவீதம் பேர் இறந்துவிடுகிறார்கள். இதய நோயால் இறக்கும் இந்தியரின் சராசரி வயது 59 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதிய உடற்பயிற்சி இல்லாததால் மரணத்தின் வீதம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. தண்ணீர், இனிப்பு சேர்க்காத பழரசம் குடிப்பது மிக அவசியம் என வலியுறுத்துகின்றனர் அலுவலகத்திலும் வீட்டிலும் உட்கார்ந்தே இருக்கும் நேரத்தைக் குறைக்கவும் அறிவுறுத்துகிறார்கள்.

Exit mobile version