அமெரிக்க தேர்தலில் டோனால்டு ட்ரம்ப்பின் வெற்றி குறித்து சர்ச்சை எழுந்தது. ட்ரம்பிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பிரசாரம் மேற்கொள்ள பெருந்தொகையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு, பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற நிறுவனம் பணியமர்த்தப்பட்டது. இந்த நிறுவனம் சுமார் 5 கோடி அமெரிக்கர்களின் சமூக வலைதள விவரங்களை திருடியதாக செய்தி வெளியானது. இதுகுறித்த தகவல்களை அந்நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் கிறிஸ்டோபர் வைலி பகிரங்கப்படுத்தினர். இவர் தற்போது தனது ட்விட்டர் பதிவில், மேலும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். அதில், கேம்ரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சாம் பேட்டன் என்பவர் மீது அமெரிக்க உளவு நிறுவனமான FBI குற்றம்சாட்டு பதிவு செய்து கைது செய்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இவர், அமெரிக்க வாக்காளர்களிடையே ட்ரம்புக்கு ஆதரவான மனநிலையை உருவாக்க சமூக வலைதளங்களை பயன்படுத்தியதாக FBI உறுதி செய்துள்ளது. மேலும், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகும் என கிறிஸ்டோபர் வைலி தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க தேர்தலில் டோனால்டு ட்ரம்ப்பின் வெற்றி குறித்து சர்ச்சை
-
By Web Team
- Categories: TopNews, உலகம், செய்திகள்
- Tags: கேம்ரிட்ஜ் அனாலிட்டிக்காடொனால்டு ட்ரம்ப்வெற்றி குறித்து சர்ச்சை
Related Content
`கொரோனாவைக் கண்டு அஞ்சவேண்டாம்’ - டொனால்ட் டிரம்ப் அறிவுறுத்தல்!
By
Web Team
October 6, 2020
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பாதிப்பு!
By
Web Team
October 2, 2020
ஹாலோவீன் திருவிழாவின்போது குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கிய அதிபர் டிரம்ப்
By
Web Team
October 30, 2019
ஈரான் நெருப்புடன் விளையாடி வருவதாக ட்ரம்ப் எச்சரிக்கை
By
Web Team
July 2, 2019
ஈரான் மீது மேலும் பொருளாதார தடை விதித்த ட்ரம்ப்
By
Web Team
May 9, 2019