ஈரான் மீது மேலும் பொருளாதார தடை விதித்த ட்ரம்ப்

ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அணு ஆயுதங்களை தயாரித்து வரும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஈரானிடம் கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டாம் என தனது நட்பு நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அமெரிக்காவின் பொருளாதார தடையால் எரிச்சலடைந்துள்ள ஈரான், அணுசக்தி ஒப்பந்தங்களை மீறப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது.

இதையடுத்து ஈரானின் இரும்பு மற்றும் சுரங்க துறைகள் மீது அதிபர் ட்ரம்ப் புதிய தடைகளை விதித்துள்ளார். எண்ணெய் வளத்துக்கு அடுத்தபடியாக ஈரானுக்கு அதிக வருமானத்தை தரும் துறைகளை இலக்கு வைத்திருப்பதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version