ஈரான் நெருப்புடன் விளையாடி வருவதாக ட்ரம்ப் எச்சரிக்கை

யுரேனியம் கையிருப்பு குறித்த விவகாரத்தில் ஈரான், நெருப்புடன் விளையாடி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். 2015ம் ஆண்டு பல்வேறு நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. அதன் படி எந்த ஒரு நாடும் 300 கிலோவிற்கு அதிகமாக யுரேனியம் கையிருப்பு வைத்திருக்கக் கூடாது . ஆனால் ஈரான் குறிப்பிட்ட அளவை விட அதிகமாக யுரேனியத்தை கையிருப்பில் வைத்திருப்பதாக பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டின.

இந்நிலையில் திங்களன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட ஈரான் தாங்கள் நிர்ணயிக்கப்பட்ட யுரேனிய அளவினை தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதற்கு பிரிட்டன், ரஷ்யா போன்ற உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஈரான் நெருப்போடு விளையாடி வருவதாக எச்சரித்தார்.

Exit mobile version