வண்டலூர் பூங்காவில் பிறந்த சிங்க குட்டிக்கு முதலமைச்சர் 'ஜெயா' என சூட்டினார்.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயரியல் பூங்காவில் பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று துவக்கிவைத்தார். தொடரந்து பூங்காவில் உள்ள 6 மாத  சிங்க குட்டிக்கு ஜெயா என பெயர் சூட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா விலங்குகள் மீது ஆதித பாசம் கொண்டவர் என குறிப்பிட்டார். பொதுமக்கள் வசதிக்காக பூங்காவில் பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர் பூங்காவில் 17 சிங்கங்களும், 193 வகையான 2ஆயிரத்து 400க்கும் மேற்பட்ட விலங்குகள் இருப்பதாக கூறினார். விரைவில்  சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் பீகார் மாநிலத்தில் இருந்து காண்டாமிருகம் கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலை எதிர்கொள்ள அதிமுக தயாராக இருப்பதாகவும், தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என கூறினார். குடிமராமத்து பணிக்காக 320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டத்திற்கு விவசாயிகளிடையே வரவேற்பு இருப்பதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version