பாலியல் புகாரால் இரண்டு சர்வதேச போட்டிகளில் ரொனால்டோவுக்கு இடமில்லை

பாலியல் புகாரில் சிக்கியுள்ள கால்பந்து உலகின் பிரபல நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ 20 நாட்களில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காகவும், ஜிவண்டஸ் அணிக்காகவும் விளையாடி வருகிறார். சமீபத்தில் அமெரிக்க அழகியான கேத்ரின் மயோர்கா (kathryn mayorga) ரொனால்டோ மீது பாலியல் புகார் அளித்தார்.

அதில், கடந்த 2009 ஆம் ஆண்டு லாஸ் வேகாஸ் நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் ரொனால்டோ தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார். இதன்பேரில் விசாரணையை துவங்கியுள்ள லாஸ்வேகாஸ் போலீசார், 20 நாட்களில் ஆஜராகுமாறு ரொனால்டோவுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

தம் மீதான புகாரை திட்டவட்டமாக மறுத்துள்ள ரொனால்டோ, இது பொய்யான குற்றசாட்டு என்றும், தமது நற்பெயரை கலங்கப்படுத்தவே இம்மாதிரியான செயல்கள் அரங்கேறுவதாகவும் கூறியுள்ளார். புகாரை சட்டப்படி சந்திக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த புகாரால் நெருக்கடிக்குள்ளான ரொனால்டோ, போலந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான சர்வதேச போட்டியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version