மீ டூ ஹாஷ்டேக்கில் சுசி கணேசன் மீது பாலியல் புகார்

மீ டூ ஹாஷ்டேக்கில் தினம் ஒரு பிரபலம் சிக்கி வருவது தொடர்கதையாகி விட்டது. இந்நிலையில் திருட்டுப்பயலே, கந்தசாமி, திருட்டுப்பயலே 2 ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனரான சுசி கணேசன் மீது குறும்பட இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை, பாலியல் புகார் கூறியுள்ளார்.

காரில் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள சுசி கணேசன் முயற்சி செய்ததாக அவர் புகார் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தை அப்போது சொல்ல தனக்கு தைரியம் இல்லை என்றும், இதற்கான சரியான நேரம் இது என்பதால் அறிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், லீனா மணிமேகலை தெரிவித்துள்ள புகாருக்கு சுசி கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கற்பு என்பது இருபாலுருக்கும் பொதுவானது என்று கூறியுள்ள அவர், லீனா மீது வழக்கு தொடர இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version