ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் மீது மேலும் பாலியல் புகார்

ஈரோட்டில் ஆபாச படம் எடுத்து கல்லூரி மாணவியை மிரட்டி 4 ஆண்டுகளாக பாலியல் வன்முறை செய்து கைதான ரியல் எஸ்டேட் அதிபர் மீது மேலும் ஒரு இளம் பெண் பாலியல் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், திண்டலில் கல்லூரி மாணவியிடம் நண்பராக பழகிய வில்லரசம்பட்டியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்ற நபர் ஆபாச படம் எடுத்து 4 ஆண்டுகளாக பாலியல் வன்முறை செய்ததாக சில தினங்களுக்கு முன் புகார் எழுந்தது. அதன் பேரில் ரியல் எஸ்டேட் அதிபர் ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், ராதாகிருண்ணன் மீது மேலும் ஒரு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணின் கணவருடன் நண்பனாக அறிமுகமாகிய ராதாகிருஷ்ணன், அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்முறை செய்ய முயற்சித்தாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த அப்பெண் புகார் மனுவாக அளித்துள்ளார். தன்னை போல பல பெண்களை மிரட்டி பாலியல் இச்சைகளுக்கு ராதாகிருஷ்ணன் பயன்படுத்தி வந்ததாகவும் மனுவில் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version