ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: 3வது உறுப்பினர் நியமனம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் விவகார வழக்கை விசாரிக்கும் நீதிபதி பாப்டே குழுவில் 3வது உறுப்பினராக நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாருக்கு தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்த நிலையில், புகாரை விசாரிக்க மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையில் 3 நீதிபதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணை குழுவில் இருந்து நீதிபதி விலகவேண்டும் என்று புகார் அளிக்கப்பட்ட பெண் ஊழியர் தடுப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டநிலையில், இந்த குழுவில் இருந்து விலகுவதாக நீதிபதி ரமணா அறிவித்தார். இதையடுத்து, விசாரணை குழுவில் 3வது உறுப்பினராக நீதிபதி இந்து மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version