பார்வையற்ற மகனை கொன்ற தாய் கைது

பார்வை இழந்த 13 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை ஆலந்தூர் அடுத்த பரங்கிமலை இந்திரா நகரை சேர்ந்த பத்மா என்பவர் கணவன் கைவிட்ட நிலையில், பார்வை இழந்த தனது 13 வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். பத்மாவின் தாயார் இவருக்கு ஆதரவு அளித்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரும் உயிரிழந்தார். இதனால், ஆதரவில்லாமல் மன விரக்தியில் இருந்த பத்மா, தனது மகன் பரத்தை கொலை செய்து விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். இதனால், மகனை பிளாஸ்டிக் பையால் மூடி, துப்பட்டாவால் கழுத்தை நெறுக்கிவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இதில், எதிர்பாராவிதமாக கயிறு அறுந்து விழுந்ததில் உயிர் பிழைத்த பத்மா, மகனை காப்பாற்ற முயற்சி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அப்போது பரத்தை சோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் பரங்கிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அவரை கைது செய்த போலீசார், பத்மா மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

 

Exit mobile version