பாகிஸ்தானில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் தளர்வு

பாகிஸ்தானில் புதிதாக பதவியேற்றுள்ள இம்ரான் கான் தலைமையிலான புதிய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானில் ஊடகங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இதனால், செய்திகளை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை இருந்தது. இந்தநிலையில், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகளை இம்ரான்கான் அரசு தளர்த்தியுள்ளது. ஊடகங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அவை செய்திகளை வெளியிடுவதில் எந்த தடையும் இல்லை என்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஃபாவட் சவுத்ரி (Fawad Chaudhary) தெரிவித்துள்ளார்.

Exit mobile version