பயங்கர விபத்து: 8 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கார், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாரத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில், காரில் பயணம் செய்த 2 குழந்தைகள், 3 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து விரைந்து வந்த போலீசார், படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 4 பேரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன், விபத்துகு குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, கார் ஓட்டுனர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version