தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது காவல் ஆணையரிடம் புகார்! 

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சாசாங் என்பவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில்  தமிழில் இருந்து தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள நோட்டா என்ற படத்தை, தானே மொழி மாற்றம் செய்ததாகவும் ஆனால் தனக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறியுள்ளார்.

மேலும் படத்தின் டைட்டில் கார்டில் தனது பெயரை போடாமல் தனது உதவியாளரின் பெயர் போடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே தனக்கு சம்பளம் வழங்குவதோடு, டைட்டில் கார்டிலும் தனது பெயரை போடுமாறு புகார் மனுவில் தெரிவித்துள்ளார். 

 

 

Exit mobile version