ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு இனி இலவச உணவு கிடையாது

எரிபொருள் விலையேற்றத்தினால், ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் வரும் 28-ம் தேதி முதல் பயணிகளுக்கு இலவச உணவு வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஜெட் ஏர்வேஸ் தலைமை அதிகாரி நரேஸ் கோஹல், எரிபொருட்களின் விலையேற்றத்தினால் வரும் 28-ம் தேதி முதல் ஜெட் ஏர்வேஸைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு, இலவச உணவு வழங்கப்படாது என்று கூறினார். அதற்குப் பதிலாக, டீ மற்றும் காபி ஆகிய இதர சேவைகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சில வி.ஐ.பிக்களுக்கு மட்டும் கட்டணத்தொகையின் அடிப்படையில் உணவு வழங்கப்படும் என்றும், இதர பயணிகள் பணம் கொடுத்து உணவுகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நரேஸ் கோஹல் தெரிவித்தார்.
இதனிடையே கடந்த 3 மாதங்களில் மட்டும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், ஆயிரத்து 323 கோடிரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version