காஷ்மீரில் வாகன விபத்து: 11 பேர் பலி

காஷ்மீரில் பக்தர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியாகினர்.

காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வரைச் சேர்ந்த பக்தர்கள் மச்சேலில் உள்ள மாதா கோவிலுக்கு வாகனத்தில் சென்றனர். மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, செனாப் ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வாகனத்தில் இருந்தவர்கள் வெள்ளத்திலும் மூழ்கினர்.

இந்த விபத்தில் இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

 

 

Exit mobile version