கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் முனிர் அலிகான். இவர் தனது மனைவி மற்றும் உறவினருடன் ஹஜ் பயணம் முடித்து விட்டு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர்.

இவர்களுடன் தருமபுரியைச் சேர்ந்த அப்துல் ரஹமான் என்பவரும் ஹஜ் பயணம் முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் இவர்களை காரில் அழைத்து செல்ல வந்த முனிர் அலிகானுடைய மகன், மற்றும் உறவினர் ஜுபேர் அகமது , ஹஜ் பயணிகளை மற்றொரு காரில் அனுப்பி விட்டு,அவர்களின் உடமைகளை மட்டும் எடுத்துகொண்டு, உதவி கேட்ட தருமபுரியை சேர்ந்த அப்துல்ரகுமானை ஏற்றிக்கொண்டு ஆம்பூர் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கார் வடப்புதுப்பட்டு என்ற இடத்தில் வந்த போது, முன்னால் சென்ற கண்டெய்னர் லாரியை கடக்க முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் முனிர் அலிகான் மகன் அப்பாஸ் அலி, ஜுபேர் அகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்துல் ரகுமான் கவலைகிடமான நிலையில் ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

image இது குறித்து ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்ததுடன், படுகாயமடைந்தவருக்கு ஆறுதல் கூறினார்.

 

 

Exit mobile version