இயந்திரம் கோளாறு – கடற்படை வீரரின் உயிரைப் பறித்த பாராகிளைடிங் சாகசம்!

பாரா கிளைடிங் சாகசத்தில் ஈடுபட்ட இந்திய கடற்படை வீரர் இயந்திரம் கோளாறால் கடலில் விழுந்து உயிரிழந்த பதைபதைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன…

ஆந்திர மாநிலத்தின் சிக்கபல்லபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மதுசூதன் ரெட்டி. கர்நாடக மாநிலத்தின் கார்வார் மாவட்டத்தில் உள்ள தாகூர் கடற்கரைக்கு குடும்பத்தினருடன் வந்த அவர், பாராகிளைடரில் பறக்கும் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். பாராகிளைடரில் ஏறி அமர்ந்தவுடன் எப்போதும் போல் இயங்கி மேலே சென்றது. ஆனால் 100 அடி உயரத்தை அடைந்தவுடன் என்ஜினின் இயக்கம் திடீரென நின்றது. இதனால் 100 அடி உயரத்தில் இருந்து அப்படியே கடலில் விழுந்தார் .

அவருடன் பயணித்த பாராகிளைடரை இயக்கிய வித்யாதர் வைத்யாவும் கடலில் விழுந்தாலும் சிறு காயங்களுடன் தப்பினார். ஆனால் மதுசூதன் பரிதாபமாக உயிரிழந்தார். கடற்படையில் பணியாற்றும் மதுசூதன் சிறந்த நீச்சல் வீரராக இருந்தாலும் சீட் பெல்ட் அணிந்திருந்ததால் கடலுக்குள் மூழ்கி நீந்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாராகிளைடிங் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் துவங்கியுள்ள நிலையில் சரியான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளததால் விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது.

 

Exit mobile version