அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து – தலை குப்புற கவிழ்ந்த ஆட்டோ

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதிய விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. அப்போது காந்திநகர் அருகே, பக்கவாட்டில் இருந்து வந்த இருசக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது. வேகத்தால், பேருந்தை கட்டுப்படுத்த இயலாத அதன் ஓட்டுநர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பேருந்தை இடதுபுறமாக திருப்பிய போது அருகே சென்றுக் கொண்டிருந்த ஆட்டோ மீது மோதியது. இந்த கோர விபத்தில், அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிர் சேதமும் ஏற்படாத நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version