சுங்கச்சாவடியில் விபத்தை ஏற்படுத்திய கார்

ராஜஸ்தான் மாநிலத்தில் சுங்கச்சாவடி ஊழியர்கள் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிஷன்கார் சுங்கச்சாவடியின் தடுப்பு மீது கார் மோதியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் கார் ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகராறு முற்றிப்போக ஆத்திரமடைந்த ஓட்டுனர், காரை முன்னும் பின்னுமாக வேகமாக ஓட்டி ஊழியர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டார்.

கண் இமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. விபத்தில் காயமடைந்த 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Exit mobile version