எதிர்கட்சிகள் கூட்டணி அமைத்தால் பா.ஜ.க. நிலை பரிதாபமாகும் – கருத்துக் கணிப்பில் தகவல்

மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வலுவான கூட்டணி அமைத்தால், பாரதிய ஜனதாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், தனியார் நிறுவனம் ஒன்று கருத்துக் கணிப்பை நடத்தியது. அதன்படி, பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அந்தக் கட்சிக்கு பின்னடைவு ஏற்படும் என்பது தெரிய வந்துள்ளது.

தற்போதைய சூழலில் தேர்தல் நடத்தப்பட்டால் பாஜகவுக்கு 276 இடங்களும், காங்கிரசுக்கு 122 இடங்களும் கிடைக்கும் என்று கருத்து கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.

மற்ற கட்சிகளுக்கு 155 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது பாஜகவுக்கு உற்சாகம் அளித்தாலும், இந்தக் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால், தேர்தல் முடிவு வேறு விதமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தென் மாநிலங்களை பொருத்த வரையில், காங்கிரஸ் கூட்டணிக்கு 32 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பாஜகவுக்கு 21 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சி வலுவான கூட்டணியை அமைத்தால், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

Exit mobile version