சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!

சென்னையில் கொரோனா பாதிப்பு, படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அதிகபட்சமாக தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களில் 89 சதவீதம் பேரும், மணலி மற்றும் மாதவரத்தில் 86 சதவீதம் பேரும் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதேபோல், தேனாம்பேட்டை மண்டலத்தில் 85 சதவீதம் பேரும், திருவொற்றியூர் மண்டலத்தில் 84 சதவீதம் பேரும், வளசரவாக்கத்தில் 83 சதவீதம் பேரும், சோழிங்கநல்லூர், அண்ணா நகரில் 82 சதவீதம் பேரும் குணமடைந்துள்ளனர்.

Exit mobile version