சென்னையில் மண்டல வாரியாக அதிகரிக்கும் கொரோனா!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 49 ஆயிரத்து 690 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக பாதிப்பு நிலவரங்களை பார்க்கலாம்…

அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 211 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தண்டையார்பேட்டையில் 5 ஆயிரத்து 989 பேரும், தேனாம்பேட்டையில் 5 ஆயிரத்து 655 பேரும், அண்ணாநகரில் 5 ஆயிரத்து 397 பேரும், கோடம்பாக்கத்தில் 5 ஆயிரத்து 316 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். திரு.வி.க. நகரில் 4 ஆயிரத்து 132 பேரும், அடையாறில் 3 ஆயிரத்து 57 பேரும், வளசரவாக்கத்தில் 2 ஆயிரத்து 201 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பத்தூரில் ஆயிரத்து 982 பேருக்கும், திருவொற்றியூரில் ஆயிரத்து 912 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version