சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ள நிலையில், மண்டல வாரியாக சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரத்தை தற்போது பார்க்கலாம்…
அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 2 ஆயிரத்து 737 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 4 ஆயிரத்து 329 பேர் குணமடைந்துள்ளதாகவும் மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, அண்ணாநகரில் 2 ஆயிரத்து 398 பேரும், ராயபுரத்தில் 2 ஆயிரத்து 320 பேரும், தண்டையார் பேட்டையில் 2 ஆயிரத்து 227 பேரும், சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் 2 ஆயிரத்து 222 பேரும், அடையாறில் ஆயிரத்து 863 பேரும், திருவிக நகரில் ஆயிரத்து 775 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் ஆயிரத்து 264 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்பத்தூரில், ஆயிரத்து 260 பேரும், திருவொற்றியூரில் ஆயிரத்து 210 பேரும் சிகிச்சையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.