முன்னணி உணவு வழங்கும் நிறுவனமான uber eats நிறுவனத்தை zomato நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது
வீட்டில் சமைத்து சாப்பிடும் வழக்கம் போயி , பிறகு ஹோட்டலுக்கு சென்று உணவு சாப்பிடும் பழக்கமும் குறைந்து , தற்போது வீட்டிலிருந்தபடியே உணவு விடுதியில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து அதை வீட்டுக்கு வரவழைத்து சாப்பிடும் வழக்கம் வந்து விட்டது..
அதற்கென தனி நிறுவனங்களும் அமைத்து செயல்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் உணவு வினியோகம் செய்ய swiggy , zomato , Uber eats.. போன்ற நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன.
2014 -ஆம் ஆண்டு ubereats தனது சேவையை இந்தியாவில் தொடங்கியது. தற்போது மற்ற நிறுவனங்களுடன் போட்டியிட முடியவில்லை என, முதலில் Uber eats நிறுவனத்தில் வேலை செய்யும் ஆட்களை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டது.
பின்னர் Uber eats நிறுவனம் நஷ்டத்தை ஈடுகட்ட முடியாது என நிறுவனத்தை விற்க முடிவு செய்தது. இதனால் Uber eats நிறுவனம் zomato நிறுவனத்திற்கு தனது பங்குகளை விற்பனை செய்யப்போவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் தற்போது Uber eats வாடிக்கையாளர்களின் விவரம், ஊழியர்கள் உள்ளிட்டவற்றை மாற்ற உள்ளது.
அத்துடன் uber செயலியை பயன்படுத்தி மக்கள் இன்னும் ஆறு மாதங்களுக்கு zomato செயலி மூலம் உணவுகளை பெறுவார்கள். அதே சமயம் Uber நிறுவனம் தனது வாடகை கார் சேவையை தொடர்ந்து இந்தியாவில் நடத்த உள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.