இந்தியாவின் தேசிய மொழி இந்தி என்று வாடிக்கையாளரிடம் பதிலளித்த Zomato நிறுவனத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் வலுத்துள்ளன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விகாஷ் என்ற இளைஞர் Zomato-வில் ஆர்டர் செய்த உணவு முழுமையாக டெலிவரி செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த பிரச்சனை காரணமாக Zomato வாடிக்கையாளர் சேவை மையத்தை அவர் அணுகி, பணத்தை மீண்டும் கேட்டுள்ளார். அப்போது மொழிப் பிரச்னையால் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகத்திடம் இதுகுறித்துக் கேட்க முடியவில்லை என சொமேட்டோ சேவை மையம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் Zomato செயல்பட்டால், அங்கு வாழும் மக்களின் மொழியை அறிந்தவர் வேலைக்கு அமர்த்த வேண்டும் என விகாஷ் கூறியுள்ளார். இதற்கு, இந்தி நமது தேசிய மொழி என்றும் அனைவரும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் என்றும் Zomato சேவை மையம் விகாஷிடம் கூறியுள்ளது.
Zomato நிறுவனத்துடனான இந்த உரையாடலை விகாஷ், தனது ட்விட்டரில் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலரும் Zomato நிறுவனத்திற்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள zomato நிறுவனம், வாடிக்கையாளருக்கு பதிலளித்த ஊழியர் பணிநீக்கம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேற்கண்ட செய்தியை காணொலியாக பார்க்க!!
⬇⬇⬇ ⬇⬇⬇