ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குள்ளனாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தனது 53வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். ஷாருக்கானுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஷாருக் நடித்துள்ள ‘ஜீரோ’ படத்திற்காக ட்விட்டரில் உலாவும் புதிய இமோஜி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் குள்ளனாக நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் அனுஷ்கா ஷர்மா, கத்ரீனா கைஃப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் ரிலீசாகவுள்ளது.

 

Exit mobile version