ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது, தடியடி நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல் ஆகிய 2-ம் இணைந்து நடைபெறவுள்ளது. இதையடுத்து எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சித்தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, கிருஷ்ணா மாவட்டத்தில், உள்ள மயிலாவரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது ஜெகன் மோகன் ரெட்டி சந்திரபாபு நாயுடுவையும், காவல்துறையினரையும் கடுமையாக விமர்சித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அப்போது காவல்துறையினர் மீது கல் எறியப்பட்டதால், பாதுகாப்பு பணி செய்துகொண்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் திடீரென ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது தடியடி நடத்தினர்.