பப்ஜி மதனிடம் பணத்தை ஏமாந்தவர்கள் புகார் அளிக்க ஏதுவாக, காவல்துறையினர் மின்னஞ்சல் முகவரி ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
பப்ஜி மதனிடம் சைபர் கிரைம் போலீசார் விடிய விடிய நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், யூடியூப் மூலம் மட்டுமின்றி, தனி நபர்களிடம் பேசி Google pay மூலம் பண பெற்று மோசடி செய்தது தெரியவந்துள்ளது. மேலும், வங்கிக் கணக்கில் 4 கோடி ரூபாய், விலை உயர்ந்த 2 சொகுசு கார்கள், தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் தலா 45 லட்சம் ரூபாயில் சொகுசு வீடுகள், தங்கம், வைர நகைகள் என, கோடீஸ்வர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், இதற்காக ஒரு ரூபாய் கூட வருமான வரி செலுத்தாததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பப்ஜி மதன் VPN சர்வரை பயன்படுத்தியது, கொரியன் ஆப்பை பயன்படுத்தியது குறித்து போலீசார் வீடியோ பதிவு செய்துள்ளனர். விசாரணையின் போது, பப்ஜி மதன் போலீசாரிடம் திமிராக பேசியிருக்கிறார். இதனிடையே, பப்ஜி மதனிடம் பணத்தை ஏமாந்தவர்கள், மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளித்தால், பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பண மோசடி பற்றி புகார் அளிக்க DCPCCB1@GMAIL.COM
Discussion about this post