சென்னையில் இளைஞரை காரில் கடத்திச் சென்று 98 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு நிதிநிறுவனத்தில் பணியாற்றிவரும் கோபிநாத், 15F வழித்தட மாநகர பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். டெயிலர்ஸ் ரோடு பேருந்து நிறுத்தம் வந்தபோது கோபிநாத்திடம் போலீஸ் எனக்கூறி இனோவா காரில் வந்த மூன்று பேர் மற்றும் யமாகா இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரும் பேருந்தில் ஏறி கஞ்சா வைத்திருப்பதாக கூறி கைது செய்து காரில் கடத்தி சென்றனர். கோபிநாத்தின் கையில் விலங்கு போட்டு கடத்திச் சென்று 98 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு வண்டலூர் அருகே இறக்கிவிட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.