வறண்ட பகுதியில் குளிர்ந்த ஆப்பிள் விவசாயம் செய்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் விருதுநகரை சேர்ந்த பட்டதாரி இளைஞர்.
விருதுநகர் மாவட்டம் பாப்பாக்குடி கிராமத்தில் பட்டப்படிப்பு படித்துவிட்டு குளிர்ச்சி ஆப்பிள் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார் பட்டாதாரி இளைஞர் ஆப்ரகாம். வறண்ட பூமியாக இருந்த கிராமத்தில் தனது விடா முயற்சியால் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் சொட்டுநீர் பாசனம் மூலம் குளிர்ச்சி ஆப்பிள் விவசாயம் செய்து வருகிறார். மருத்துவகுணம் கொண்ட குளிர்ச்சி ஆப்பிள் புற்றுநோய்க்கு சிறந்த மருந்தாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணுவதால் அதிகம் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2 வார காலத்திற்குள் 30 கிலோ வரையிலான மகசூல் கிடைப்பதாக கூறும் ஆப்ரகாம், குளிர்ச்சி ஆப்பிள் வறண்ட நிலப்பரப்பில் விளைவது மிகவும் கடினம் எனவும் அவர் கூறுகிறார்.