பொள்ளாச்சி பாலியல் சம்பவம் போல் நாகை மாவட்டத்திலும் கல்லூரி மாணவிகளை காதலிப்பதாக கூறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகையை சேர்ந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகை மாவட்டம் வண்டிபேட்டையைச் சேர்ந்தவர் சுந்தர். சென்னையில் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் நாகையைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணிடம் நெருக்கமாக உள்ள படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி, பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் நாகை காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே சென்னை விரைந்த தனிப்படை போலீசார் சுந்தரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் சுந்தரின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில் ஏராளமான பெண்களுடன் சுந்தர் நெருக்கமாக இருப்பது தெரியவந்தள்ளது. இதனையடுத்து இளைஞரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.