டிக்டாக்கில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய இளைஞர் கைது

டிக்டாக்கில் இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அரியலூர் மாவட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் முதுகுளம் கிராமத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி, இரு பிரிவினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் டிக்டாக் சமூக வலைதளத்தில் பேசி பதிவிட்டு இருந்தார். இதனால் அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. பல தரப்பிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஜாஸ்மின் காவல்துறையில் கொடுத்த புகாரின்பேரில், சத்தியமூர்த்தியை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இது போன்ற நபர்களை கண்காணித்து அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து கைது செய்த போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Exit mobile version