சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

பெரியநாயக்கன்பாளையம் அருகே சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அஜித்குமார். இவர் கடந்த 2016ம் ஆண்டு இதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி, குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. சிறுமியை மீட்டுத்தரக்கோரி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி கர்ப்பமடைந்து, தற்போது 5 மாத பெண் குழந்தை உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அஜித்குமார் தாக்கியதாக தெரிகிறது. இதனால் குழந்தையுடன் சிறுமி பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். மகளை மீட்ட பெற்றோர், துடியலூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், அஜித்குமாரை போக்சோ சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

Exit mobile version